Sunday, 1 July 2012

வருகிறார் ஆர்த்தி... அலறும் நித்தி...



காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம்.
'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.
அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!
43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.
முதல் சந்திப்பு!
''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.
நித்தியின் வியாக்கியானம்
''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன். அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.
'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.
'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.
நீதான் எந்தன் தேவி!
2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார். அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார். குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.
'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.
ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!
''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''
நீ என் தாய் (எ) மாயி
''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''
போதை ஏற்றிய நித்தி
''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''
வாரணாசியில் தாசி
''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன். 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''
கிளாமர் உடைகள், ஆணுறை
''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''
கும்ப மேளாவில் சில்மிஷம்!
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''
சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!
''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார். அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''
125 ஆண்டு வாழ்வேன்!
''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார்.  அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''
விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!
''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.
ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.
'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.
தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்
இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.
கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,
இப்போதே பிடதியில் புகைவாசம்!

பரிதாபத்தில் ராமஜெயம் வழக்கு!





ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் சிரித்​தவர்​கள்தான் அதிகம்!
ராமஜெயம் கொலை வழக்கை மூன்று மாதங்​களாக டீம் டீமாக... டிசைன் டிசைனாக... விசாரித்துப் பார்த்தும் எந்த உருப்படியான துப்பும் கிடைக்காமல், திணறிக்கொண்டே இருந்தார்கள், திருச்சி போலீஸார். மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டதால் திருச்சி தி.மு.க. பிரமுகர்களும் பேஸ்தடித்துக்கிடந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைகளுக்கு மாறவே, 'மறுபடியும் முதல்ல இருந்தா..?’ என்று அலறுகிறார்கள் ஏற்கெனவே போலீஸிடம் வறுபட்டவர்கள்.
ஜூன் 26-ம் தேதி மாலை திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.​மலைச்சாமிக்கு சென்னை தலை​மை அலுவலகத்தில் இருந்து, 'ராம​ஜெயம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களை திருச்சி மாநகர போலீஸிடம் போய் வாங்கிக்​​​கொள்ளுங்கள்’ என்று திடீர் உத்தரவு வந்தது. அதன்படி 1,500 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வாங்கிக்கொண்டார் டி.எஸ்.பி. மலைச்சாமி.
மறுநாள் காலை, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனி கார்களில் புறப்​பட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, காலை 11.30 மணிக்குக் கிளம்பியது படை. திருவளர்ச்சோலை பகுதியில், ராமஜெயம் உடல்கிடந்த இடத்தை வரைபட உதவியுடன் தேடிக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் உதவி செய்த பிறகுதான், இடத்தை அடையாளம் கண்டார்கள். அங்கிருந்து காரில் கிளம்பி, ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதைகளை ஒரு ரவுண்ட் அடித்தனர். அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். அங்கு கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்துப் பேசினார்கள்.
மன்னார்புரம், காஜாநகர் பகுதி​யில் வாடகை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கடந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கக் கூடுதல் போலீஸ் தேவை என்பதால், மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாற்றப்பட்டு இருந்​தனர். அவர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல் தெருவில் அலைந்து​கொண்டு இருந்ததுதான் பரிதாபம்.
மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. ''எங்கள் வசம் தமிழகம் முழுக்க 114 வழக்குகள் உள்ளன. எங்களால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என எதுவும் கிடையாது. ராமஜெயம் கொலை வழக்கைக் கண்டுபிடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிர்ணயிக்கவும் முடியாது. திருச்சி போலீஸ் எங்களிடம் ஒப்படைத்துள்ள 1,500 பக்க ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்த பிறகு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவோம். புதுக்கோட்டை முத்துக்குமார் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு, மதுரை வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு ஆகியவற்றில் சிறப்பாக துப்புத் துலக்கியதுபோன்று, ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளையும் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்'' என்ற ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம், ''திருச்சியில் வையம்பட்டியில் நடந்த துரைராஜ், அவரது கார் டிரைவர் கொலை வழக்கு மற்றும் மணிகண்டத்தில் நடந்த துரைராஜின் அண்ணன் தங்கவேல் கொலை வழக்கு ஆகியவை ஐந்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி-யால் துப்புத் துலக்கப்படாமல் இருக்கிறதே?'' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.
''அந்த வழக்குகளையும் தீவிரமாக விசாரித்துவருகிறோம். எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்று சமாளித்து முடித்தார்.
திருச்சி போலீஸ் கிளப்பில் தங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பதுபோல் திருச்சி மாநகரப் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துவருகிறாராம். டி.எஸ்.பி. மலைச்சாமியை தலைமைப் புலனாய்வு அதிகாரியாகக்கொண்டு, அவருக்கு கீழ் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் டீம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் எஸ்.பி-யின் உத்தரவுக்​காகக் காத்திருக்கிறார்கள்.
''போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்​குப் போகவேண்டும் என்பதால், எங்களால் கடந்த மூன்று மாதங்களாக நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக்கூட வெளியூர் போகமுடியவில்லை. இனி, சி.பி.சி.ஐ.டி. டீமும் எங்களது தூக்கத்தைக் கெடுக்கத்தான்போகிறது'' என்ற முணுமுணுப்பு ராம​ஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் ஒலிக்கிறது.
திருச்சி போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட, சி.பி.சி.ஐ.டி. திருதிருவென விழிக்கிறது. ஏற்கெனவே, 'சி.பி.ஐ. விசாரணை கேட்போம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருவேளை சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாறினால்... அவங்களும் இப்படித்தான் வருவாங்க! விசாரிப்பாங்க! பேட்டியும் கொடுப்பாங்க!

Tuesday, 26 June 2012

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?



சத்தலான அழகு, அல்ட்ரா மாடர்ன் தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று படு ஸ்டைலாக இருப்பவர்கள்கூட சில சமயம் அருகில் வந்து வாய் திறந்தால், 'குப்’ என்று துர்நாற்றம் தூக்கும். தர்மசங்கடத்தில் நெளிந்து வளைந்து நாம் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும். ''உயிர் போற அவசரமான வேலையாக இருந்தாலும், அவரிடம் நேரில் சென்று பேச மாட்டேன். போனோட முடிச்சுக்குவேன்'' என்று ஒரு சிலர்குறித்து பயத்தோடும் முகச்சுழிப்போடும் சொல்லப்படுவதற்குக் காரணம்... வாய் துர்நாற்றம்!
ஒழுங்காகவும் முறையாகவும் பற்களை பிரஷ் பண்ணாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முதல் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு தடவையாவது பல் துலக்குவது அவசியம். குறிப்பாக, இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னர் பல் விளக்குவது மிகவும் அவசியம்.
சில வெளி சமாச்சாரங்களும் இருக்கின்றன. வெங்காயம், பூண்டு இதெல்லாம் சாப்பிட்டால், அந்த வாடை அதிக நேரம் வாயிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவது பல நன்மைகளைத் தரும். அது ஒரு கிருமிநாசினியும்கூட. ஆனால், வாயில் வெங்காய வாடை லேசில் போகாது.
பொடி போடுவது, வெற்றிலை, புகையிலை, ஜர்தா இந்த மாதிரி ஐட்டங்களைப் பயன்படுத்துவதும் 'வாசனை’ வீசச் செய்யும். புகைப் பழக்கம்பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனை தடவை வாய் கொப்பளித்தாலும் நிகோடின் நாற்றம் போகவே போகாது. மது நிச்சயமாகத் தன்னோட 'வாசனை’யைக் காட்டிக்கொடுத்துவிடும்.
இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர வேறு என்னென்ன காரணங்களால் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பது குறித்து, மருத்துவர் வி.எஸ்.நடராஜன் விவரிக்கிறார்.
''மருத்துவ மொழியில் வாய் நாற்றத்தை 'ஹாலிடோஸிஸ்’(Halitosis)  என்பார்கள். வாய் நாற்றம் ஏற்பட பாக்டீரியாக்களே முக்கியக் காரணம். வாய்க்குள்ளே அவை வளருவதற்குத் தேவையான ஈரம், வெதுவெதுப்பு, உணவு எல்லாம் கிடைப்பதால் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒவ்வொருவர் வாயிலும் இருக்கின்றன. காலையில் எழும்போது அநேகமாக எல்லோருடைய வாயில் இருந்தும் நாற்றம் வீசும். இது 'ஹாலிடோஸிஸ்’ வகையில் சேராது. பகலில் உமிழ்நீர் வாயில் அதிகமாகச் சுரக்கும். இது பாக்டீரியாக்களைக் கழுவிக்கொண்டு போய்விடும். ஆனால், ராத்திரி உமிழ்நீர்ச் சுரப்புக் குறைவு. அதனால்தான் விடிந்து எழும்போது இந்த 'ஸ்மெல் எஃபெக்ட்’.
உண்மையான பற்களைத் துலக்காவிட்டால் எப்படி வாய் நாறுமோ அதேபோல, செயற்கைப் பற்களையோ அல்லது பல் செட்டோ வைத்திருப்பவர்கள், அதை முறையாகக் கழுவிச் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் வாய் நாற்றம் ஏற்படும்.
வாயில் புண் இருப்பது அல்லது ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பது ஆகியனவும் வாய் நாற்றத்துக்குக் காரணங்கள். இதேபோல, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய்த் தொற்று இருந்தாலும்கூட வாய் நாறும். குடலில் புண் இருந்தாலும் மிகுந்த நாற்றம் அடிக்கும்.
இன்னொரு காரணம் வாய் உலர்ந்து போய்விடுவது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று சரியான மருந்து உட்கொண்டால் இது சரியாகிவிடும்.
மண்டல நோய்கள் (ஷிஹ்stமீனீவீநீ பீவீsமீணீsமீ) என்று சொல்லப்படும் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் வாய் நாற்றம் அடிக்கும். நீரிழிவு நோய் இருந்தால் வாயில் நாற்றத்துடன் சேர்ந்து லேசாகப் பழ வாடையும் வரும். சிறுநீரக வியாதிகள் இருந்தால், லேசாகச் சிறுநீர் வாடை வீசும்!
வயிற்றில் குடற்புழுத் தொற்று இருந்தாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில சமயம் தொண்டைப் பகுதியில் உள்ள சதை சற்று பலவீனம் அடையும்போது கட்டி ஒன்று தோன்றி, சிறிய பலூன் அளவுக்கு வளர்ந்து பின்னர் உடைந்தும்விடும். அதில் உணவுத் துணுக்குகள் சேரும்போதும் வாய் நாற்றம் ஏற்படும். வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் நாற்றம் அடிக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாகவே நமக்கெல்லாம் ஒரு வழக்கம். பல்லில் ஏதாவது கோளாறு என்றால்தான் பல் மருத்துவரைப் போய்ப் பாப்போம். ஒரு தொந்தரவும் இல்லையென்றாலும்கூட வருடத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் வாய் நாற்றம் ஏற்படக் கூடிய பல வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்ள முடியும்.
நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. அடிக்கடி வாய்க் கொப்பளித்தும் துப்பலாம்.  சிறு தீனிகளை இடையே சாப்பிட்டாலும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
ஏலக்காயை மெல்வது தற்காலிகமான நிவாரணம் தரும். அங்கீகரிக்கப்பட்ட மவுத் வாஷ்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் நடராஜன்.
மேலே சொன்ன வழிகளை எல்லாம் கடைப்பிடித்தால், பொன் மலர் நாற்றமுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப விளங்குவீர்கள். கவனிக்க... நாற்றம் என்கிற வார்த்தைக்கான பழந்தமிழ் அர்த்தம் நறுமணம்!

பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்?



'ஐஸ்வர்யா ராய் உண்டானாலும் நியூஸ். குண்டானாலும் நியூஸ்!’ என்பது இப்போது பிரபல ஜோக். ரொம்ப காலமாகவே அவர் 'ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்’ ஆகத்தான் இருந்தார். இப்போது தாய்மை தந்த பூரிப்பில் கொஞ்சம் குண்டடித்து இருக்கிறார். பிரசவத்துக்கு முன் மட்டும் அல்ல; பிரசவத்துக்குப் பின்னும் ஐஸ்வர்யாதான் ஹாட் டாபிக்.
ஐஸ்வர்யாவின் எடை கூடிவிட்டதைப் பற்றிய விவாதங்கள் அனல் பரப்புகின்றன. நமக்கு இந்த விவாதம் தேவையற்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதுகுறித்த அலசல் நிச்சயம் அவசியம். இதுகுறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்திடம் கேட்டோம்.
'தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.
நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்துச் சாப்பிடு’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம் தாய்மார்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும்சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களும்சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.
தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம். ஆனால், இவற்றுக்கான வாய்ப்புகள் குறைவு'' என்கிறார் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.
'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் உடல் எடை மேலாண்மை ஆலோசகரான டாக்டர் சுனிதா ரவி.
''கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை’ என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.  மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை' என்றவர் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ நான்கு வழிகளையும் சொன்னார்.
போதுமான அளவு சாப்பிடுங்கள்
குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
தண்ணீர் குடியுங்கள்
உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.
கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்
உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.
நேரத்துக்குத் தூங்குங்கள்
இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.
பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.''

Friday, 15 June 2012

காசி ஜெகநாதர் கடவுளுக்கு காய்ச்சல். 15 நாட்கள் நடை சாத்தப்படும் என அறிவிப்பு


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அஸ்ஸி பகுதியில் கடவுள் ஜெகநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜெய்ஸ்தா பூர்ணிமா (முழு நிலவு) அன்று கடவுளுக்கு புனித நீராட்டல் நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் ஜெகநாதர் சிலைக்கு அளவில்லாமல் புனித நீர் ஊற்றுவர்.
 
அதேபோல், சமீபத்தில் புனித நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களால் ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஜெகநாதர் மீது ஊற்றப்பட்டது.   இதன் காரணமாக கடவுள் ஜெகநாதருக்கு, சுகவீனம் ஏற்பட்டது. கடுமையான ஜலதோசம், இருமளால் அவதிப்படுகிறார். கடவுள் ஜெகநாதர் ஒய்வு எடுப்பதற்காக 15 நாட்களுக்கு நடை சாத்தப்பட்டது.
 
இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஜெகநாதருக்கு, அவரது குடும்ப டாக்டர் தினமும் இரண்டு வேளை மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்தை அளித்து வருகிறார்.  
 
என்ன? கடவுளுக்கும் காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு சடங்கு, சம்பிரதாயம் ஆகும். கடவுளை மனிதப் பிறவியாக பாவித்து செய்யப்படும் சடங்குகளில் இதுவும் ஒன்று.
 
ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், முழு நிலவு அன்று, ஜெகநாதருக்கு அளவில்லா புனித நீர் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதை தொடர்ந்து அதிகளவில் தண்ணீரில் குளித்ததால் சளிப்பிடித்து, இருமல் ஏற்பட்டதாக அறிவித்து கோவில் நடையை சாத்தி விடுவர்.
 
எப்படி மனிதர்களுக்கு டாக்டர் மூலம் சிகிச்சை அளித்து, ஓய்வு கொடுக்கப்படுமோ, அதுபோல் கடவுள் ஜெகநாதருக்கும் செய்யப்படும்.   பண்டிட் ஒருவர் கடவுளுக்கு சேவை செய்யும் டாக்டராக பாவித்து, கடவுள் சிலைக்கு மூலிகையில் தயாரான கலவைகளை தினமும் இரண்டு வேளை பூசுவார். இப்படி பூசுவதால் சிலைக்கு மேலும் சக்தி கிடைப்பதாக ஐதீகம்.
 
தற்போது தெய்வீக டாக்டர் பணியை பண்டிட் ஸ்ரீராம் ஷர்மா (வயது 33). என்பவர் கவனித்து வருகிறார். இதற்கு முன்பு இவரது தந்தை சீதாராம் ஷர்மா தெய்வீக டாக்டர் பணியை கவனித்து வந்தார். அவர் 1995-ல் மரணம் அடைந்தது முதல், அந்தப் பணியை இவர் செய்து வருகிறார்.