Tuesday, 8 May 2012


நெகிழ்ந்த இயக்குனர், பதறிய லிங்குசாமி!


ஒரு படத்தினை பார்த்து முடித்து விட்டு வெளியே வந்தால் அந்த படத்தின் பாதிப்பு ஒரு மணி நேரம் அல்லது ரெண்டு மணி நேரம் இருக்கும். ஆனால் 'வழக்கு எண் 18/9' படத்தினை பார்த்தவர்கள் பல இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பது தான்.

பாத்திர தேர்வு, யதார்த்தமாக நகரும் கதை, ஸ்டில் கேமிரா மூலம் சிறப்பாக படமாக்கியது என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி அனைவரது மனதையும் உலுக்கி எடுத்து விட்டார் பாலாஜி சக்திவேல்.

'வழக்கு எண் 18/9' படத்தின் வரவேற்பிற்கு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்திப்பு நேற்று ( மே 07 )சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். கலகலப்பாக தொடங்கிய சந்திப்பு அவ்வளவு உணர்ச்சிவசமாக முடியும் என்று யாரும் எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள்.

படக்குழுவினர் ஒவ்வொருவருமே "எங்களுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றி" என்று சொல்ல, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாலாஜி சக்திவேல்.

பாலாஜி சக்திவேல் பேசும்போது " பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாம் நான் அவ்வளவாக பேசுவது இல்லை. படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் . உங்களுக்கு எப்படி..  " என்று பேசியவர், " லிங்குசாமி.. எழுந்து அங்கே போய் நில்" என்றார். லிங்குசாமி ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் வந்து நிற்க அனைவரது முன்னிலையில், பாலாஜி சக்திவேல் கீழே விழுந்து வணங்கினார். லிங்குசாமி இதனை சற்றும் எதிர்பாராமல் திகைக்க,  இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். " இதற்கு மேல் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் பாலாஜி சக்திவேல்.
இறுதியாக பேசிய லிங்குசாமி " படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். இயக்குனர்களுக்கு என்று தனியாக ஒரு ஷோ போட்டோம். எல்லா இயக்குனர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

அவர்களை அடுத்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் என்ன கூற போகிறீர்களோ என்ற பயந்து கொண்டே, உங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே படத்தினை போட்டு காண்பித்தோம். படம் முடிந்த உடன் நீங்கள் எழுந்து நின்று கை தட்டினீர்கள்.. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது படம் கண்டிப்பாக வெற்றி என்று.

'வழக்கு எண் 18/9' படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை மேலும் மேலும் இது போன்ற பல படங்களை தயாரிக்க தூண்டியுள்ளது. கண்டிப்பாக தயாரிப்பேன்.

'வழக்கு எண் 18/9' திரைப்படம் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வெல்லும். அதற்கு காரணம், நீங்கள் படம் பற்றி எழுதியது தான். எத்தனை விருது வென்றாலும் அப்போது எல்லாம் நாம் கண்டிப்பாக சந்திப்போம் " என்று கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிவடைந்ததும் பாலாஜி சக்திவேல் சூழ்ந்து கொண்ட வீடியோகிராபர்கள் தங்களுக்கு பேட்டி தருமாறு கேட்டார்கள். அப்போது அவர் " இல்லை! இந்தப் படம் இவ்வளவு வரவேற்பை பெறும் என்று நினைக்கவில்லை. நிறைய பேர் போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதும் அனைவரும் என்னை பாராட்டும் போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். ஆகவே, இப்போது தயவு செய்து வேண்டாம். அப்புறமாக தருகிறேன் " என்று கூறினார்.

Monday, 7 May 2012

மனிதனுக்கு மட்டுமே அமைந்துள்ள சிறப்புத் தகுதி என்ன தெரியுமா?

1. சிரிப்பு – சிரிக்கத் தெரிந்தால் சாதிக்கலாம்.

2. பேச்சு – பேசத் தெரிந்தால் சாதிக்கலாம். பேரும் புகழும் வாங்கலாம்.

3. பணிவு – தலை வணங்கினால், தலைவனாகலாம். தரணி ஆளலாம்.

4. பொறுமை – பொறுமையுடன் இருந்தால் பெருமை பெறலாம்.

... 5. சகிப்புத் தன்மை பிடிக்காத்ததையும் ஏற்றுக் கொண்டால்,
பிடித்தவை தேடி வரும்.

6. துணிவு – எந்த செயலையும் செய்ய ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து
செய்வதற்கும், ஏன் தோல்வியை ஏற்பதற்கும் துணிவிருந்தால் இறுதியில் வருவது வெற்றியாகத்தான் இருக்கும்.

7. விடாமுயற்சி – முயற்சிக்கும், விடா முயற்சிக்கும் வித்தியாசங்களை புரிந்து கொண்டாலே நிச்சயம் வெற்றிதான்!

8. விவேகம் – கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. இஷ்டப்பட்டு, திட்டமிட்டு செய்தால்தான் வெற்றி பெற முடியும்.

9. விட்டுக்கொடுத்தல் – பல பிரச்சனைகளுக்கு இனிய தீர்வு விட்டுக் கொடுத்து செயல்பட்டாலே கிடைத்துவிடும்.

10. கற்றுக்கொள்ளுதல் – எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை ஓரங்கட்டிவிட்டு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள தயாரானாலே வெற்றிக்குரிய வழி புலப்படும். .......

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்..

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள்மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிற து.
இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச்செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்க ள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்ப ட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்ப ட்ட மாவுப்பொருள்களி ல் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தைநிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும ் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

மதத்தில் ஆயிரம் பிரச்னை இருக்க நான் மயிர் எடுக்காதது ஒரு விஷயமா?

ன்னை எதிர்த்து பல்வேறு மடாதிபதிகள் கொந்தளித்து இருப்பது, நித்தியானந்தாவை நிம்மதி இழக்க வைத்துள்ளது. 'மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுகிறார் என்ற உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, மயிலாடுதுறையில் கூடிய ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்தக் கூட்டம் நடந்தபோது பெங்களூருவில் இருந்தார் நித்தியானந்தா. தீர்மான விவரங்கள் கிடைத்ததும் மதுரைக்கு ஓடி வந்தார்!
நித்தியானந்தா விவரித்த கதை ஆச்சர்யமாக இருந்தது!
'என்னை மதுரை ஆதீனமாக நியமிக்கிறதுக்கு முன்னாடியே சந்நிதானத்துக்கிட்ட திரும்பப் திரும்பச் சொன்னேன். 'சந்நிதானம், என்னோட சிஷ்யன் நித்திய ஞான சொரூபானந்தாவை நியமிச்சுடுங்க. அவர் எந்த கான்ட்ராவர்சியும் இல்லாதவர். அவரும் சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். பெரிய பெரிய படிப்புகளைப் படிச்சுட்டு, துபாய்ல வேலை பார்த்தவர். மாசம் 25 லட்சம் சம்பளம் வாங்கியவர். அவரை ஆதீனமாக்கிடுங்க. என்னால் ஆன எல்லா உதவிகளையும் தொடர்ந்து செய்றேன்’னு சொன்னேன். அவர்தான் (இன்றைய மதுரை ஆதீனம்) கேட்கலை.
மற்ற ஆதீனங்கள் என்னை ஏத்துக்கிடலைன்னதும் சந்நிதானத்துக்கிட்டே, 'வாங்க நாம ரெண்டு பேரும் நேர்ல அங்கயே போவோம். விளக்கம் கொடுப்போம். ஏத்துக்கிட்டா பார்க்கலாம். இல்லைன்னா நான் ரிசைன் பண்ணிடுறேன்’னு சொன்னேன். சந்நிதானமும் அதை அவங்ககிட்ட சொன்னாங்க. ஆனா, அதுக்குள்ள என்னை அவதூறாப் பேசி, சட்டரீதியா ஆக்ஷன் எடுப்போம்னு மிரட்டுறாங்க. ஆக, பேச்சுவார்த்தையில் முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம், இப்ப யுத்தம் ஆகிடுச்சு.
நான் என் பதவி, சொத்துக்கள் எல்லாத்தையும் விட்டுட்டு நடுரோட்டுக்கு வர்றேன். 30 நாட்களில் என்னால் மறுபடியும் அதை எல்லாம் உருவாக்க முடியும். உங்களால் ( மற்ற மடாதிபதிகளைக் கேட்கிறார்!) முடியுமா? ஒரு மதத் தலைவருக்கு ஆன்ம பலம்தான்யா பலம். நான் இப்போ உறுதிமொழி எடுத்துக்கிறேன். சந்நிதானத்தின் காலத்திலோ, அதற்குப் பிறகோ, மதுரை ஆதீனத்தின் எந்தச் சொத்துக்களும் விற்கப்படாது. மேலும் மேலும் சொத்துக்களை வாங்கி ஆதீனத்தை விரிவுபடுத்துவேன்' என்றார் நித்தியானந்தா.
''அப்படீன்னா மதுரை ஆதீனத்தின் சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். 'என்னுடைய மடத்தின்சொத்துப் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டு விட்டேன். இன்டர்நெட்டில் அதைப் பார்க்கலாம். மதுரை ஆதீனத்தின் சொத்துப் பட்டியலை சந்நிதானத்தின் ஒப்புத​லோடு வெளியிடுவேன்' என்று வாக்குறுதி கொடுத்தவர்,
'நான் முடியை ஏன் எடுக்கலைன்னு கேட்கிறாங்க. இந்து மதத்துக்குத் தலை போற பிரச்னை எத்தனையோ இருக்கும்போது மயிர் ஒரு பிரச்னையாய்யா? என் முடியைப் பத்தி அவங்க பேசினா, அவங்க மீறுகிற 108 சம்பிரதாயங்களை நான் ஆதாரப்பூர்வமாக வெளியிட வேண்டியது இருக்கும்'' என்று மேலும் கொந்தளித்தார்.
'அப்படின்னா முடியை எடுக்க மாட்டீங்​களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்க, 'ஆதீனத்​திடம் என் தலைமுடியை எடுத்து விடவா என்று ஆரம்பத்திலேயே கேட்டேன். இந்த ஹேர்​ ஸ்டைலோடு உலகம் முழுக்கப் புகழ் பெற்றுவிட்டீர்கள். அது உங்களோட ஐடென்டிட்டி. அதை எடுக்க வேண்டாம்னு சொல்லிட்​டார். அதான் எடுக்கலை.
என்னை ஆதீனமாக நியமித்தது சரி​யில்லை என்றால், சந்நிதானத்திடம்தானே பேசி​​​யிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால், அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன். இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள். என்னால் அதைத் தடுக்க முடியாது.
அதேபோல, கூட்டுச் சதி 120(பி), மான நஷ்டம், அவதூறு ஏற்படுத்துதல் 100, 101, சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அனைத்து மடாதிபதிகள் மீதும் தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள். மடாதிபதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், என்னுடைய லட்சக்கணக்கான பக்தர்கள் ரத்தத்​தால் கையெழுத்திட்டு, கைநாட்டு வைத்துக் கடிதம் அனுப்ப உள்ளார்கள்.
ஜூனியர் விகடன்ல எழுதி​யிருக்​காங்க. அவருக்குப் பணம் இருக்கு... புகழ் இல்லாததால் ஆதீனமாகி​ட்டார்னு. எனக்கா புகழ் இல்லை? உலகத்தில் அதிகமாகப் பார்க்கப்படுகிற, பேசப்படுகிற விஷயம் என்னுடைய வீடியோக்​கள்தான்'' என்று விளக்கம் கொடுத்தார்.
இதுக்கு மேலும், இந்து அமைப்பு​கள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதுக்கு திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு' என்று எச்சரித்தார் நித்தியானந்தா.
என்ன சொல்லப்போகின்றன இந்து அமைப்புகள்?

Wednesday, 2 May 2012

எந்த மாவில் என்ன சத்து?


எந்த மாவில் என்ன சத்து?

''தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்'' என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வது நலம். ஆம்... ஏராளமான சத்துக்களைக் கொண்ட மாவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் குணங்களுக்குத் தக்கபடி அளவு வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வகையான மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

''அந்தக் காலத்தில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் நடந்துதான் போனார்கள். செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது உணவுப் பழக்கங்களும் இருந்தன. அன்றாட உணவில் 70 சதவிகிதம் வரை மாவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தற்போதைய சூழ்நிலையில் நாம் சாப்பிடும் உணவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்து இருந்தாலே போதும். அதாவது நாள் ஒன்றுக்கு 230 முதல் 250 கிராம் வரையிலான மாவுப் பொருட்களே போதுமானவை; எப்படிப் பார்த்தாலும் உடலுக்கு அதிக சக்தியைக் கொடுப்பதால், மாவுச் சத்து மிக்க பொருட்கள் எல்லோருக்குமே அவசியமானவை. ஆனாலும், தேவையின் அளவு தெரிந்து அவற்றைப் பயன்படுத்துவதே நலம்'' என்றவர் மாவுப் பொருட்களில் இருக்கும் சத்துக்களைப் பற்றி பேசினார்.
தானிய வகைகளைத் தோலுடன் சேர்த்து அரைக்கும்போது, அதில் ஹைடேட்ஸ் (றிபிசீஜிகிஜிணிஷி) கிடைக்கிறது. இது மாவுச் சத்துக்களால் உடலில் சேரும் தேவைக்கு அதிகமான தாது உப்புக்களை வெளியேற்றிவிடும். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள், மாவுப் பொருட்களைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய மாவுப் பொருட்களை வளரும் குழந்தைகள் சாப்பிடுவதால், நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி கிட்டும்'' எனச் சொன்ன கிருஷ்ணமூர்த்தி, மாவு வகைகளைப் பற்றி வரிசைப்படி விளக்கத் தொடங்கினார்.
மக்காச்சோள மாவு
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது. இனிப்புச் சுவையுடன் இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவில் கஞ்சி வைத்தும் குடிக்கலாம். நார்ச் சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், மங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின் ஓரளவே இருக்கிறது. கால்சியம், இரும்பு, அமினோ அமிலங்கள் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.

தினை மாவு
பொடி தானியம் என்று இதைச் சொல்லுவார்கள். சலிக்காமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு நார்ச் சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போன்றோர் தினை மாவைக் கஞ்சியாகக் குடிக்காமல் ரொட்டி செய்து சாப்பிடலாம். உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாகச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதில், கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்துக்கள், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், குரோமியம், மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரக நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம்.
கோதுமை மாவு
இது உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புளித்த ஏப்பம், புளிப்புத் தன்மை பிரச்னை இருந்தால், கோதுமை மாவைக் கூழாகக் காய்ச்சிக் குடிக்கலாம். கோதுமைக் கூழில் வெந்தயத் தூளும் ஒரு சிட்டிகை மஞ்சளும் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும். சருமத்தைப் பொலிவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொடுப்பதன் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடு நீங்கும். தாது உப்புக்கள் இருப்பதால், கிட்னி நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உளுந்து மாவு
இந்த மாவு இடுப்பு எலும்பை உறுதியாக்கும். மாதவிடாய்ப் பிரச்னையைச் சரி செய்யும். ரத்தசோகையைத் தடுக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. கால்சியம், இரும்பு, தைமின், ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் குறைந்த அளவே இருக்கிறது. வளரும் குழந்தைகள், எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயை உறிஞ்சும் தன்மை இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகள் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.
கம்பு மாவு
முளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது. கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவை மிதமான அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் குறைந்த அளவே இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் கிரகிக்கப்படும். வெல்லப்பாகு காய்ச்சி அதனுடன் கம்பு மாவைக் கலந்து உருண்டை செய்து வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், நல்ல சக்தி கிடைக்கும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றது.
கடலை மாவு
இந்த மாவு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். எளிதில் ஜீரணமாகும். சருமத்தைப் பொலிவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. இரும்பும் குரோமியமும் ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அடை செய்து சாப்பிடலாம். எல்லோருக்கும் ஏற்றது.

மைதா மாவு
கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவதுதான் வெள்ளை நிறமுள்ள மைதா. நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும். மைதாவில் செய்யும் பரோட்டா, சமோசா மற்றும் பேக்கரி வகை உணவுகள், இளம் வயதினரின் ஃபேவரிட். இதனுடன் காய்கறிகளையும், திரவ உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புரதம் ஓரளவு இருக்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், மெக்னீஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இந்த மாவுடன் ரவை, கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்த்து உண்ணுவது நல்லது. ஆனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
வெள்ளைச் சோள மாவு
இந்த மாவில் கஞ்சி, ரொட்டி போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், ஃபோலிக் அமிலம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், வைட்டமின் பி 6, மெக்னீஷியம் மற்றும் நார்ச் சத்து அதிகமாக இருக்கின்றன. புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்ற இந்த வெள்ளைச் சோள மாவு விலையும் குறைவானது. ஆனால், ஜீரணிக்கும் சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த மாவைத் தவிர்ப்பது நல்லது.
அரிசி மாவு
பச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு, சிவப்பு அரிசி மாவு எனப் பல்வேறு வகையான அரிசி மாவு வகைகள் இருந்தாலும், நடைமுறையில், பச்சரிசி மாவின் பயன்பாடுகளே அதிகம். இது எளிதில் ஜீரணமாகும். எடை குறைந்தவர்கள் வெல்லம் கலந்த கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சாப்பிட்டால் எடை கூடும். உடலுக்கு அதிக சக்தியையும் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு அரிசி மாவு உணவு மிகவும் நல்லது.  இதில் மாவுச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஓரளவு பாஸ்பரஸும்  புரதம், கால்சியம், இரும்பு, நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவும் இருக்கின்றன. சிவப்பு அரிசி மாவில் தைமின், ரிபோஃப்ளோவின் போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன. கைக்குத்தல் அரிசியில் கோலின், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இருக்கின்றன. எளிதில் ஜீரணிக்கக் கூடியது.
கேழ்வரகு மாவு
இது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கஞ்சி செய்து,  குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும்.  கார்போஹைட்ரேட், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பொட்டாசியம், தைமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், இரும்பு, நியாசின் ஆகியவை மிகக் குறைந்த அளவில் இருக்கின்றன. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கே எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் ஆகியோர் வாரத்துக்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
நன்றி- விகடன்