Monday, 7 May 2012

மதத்தில் ஆயிரம் பிரச்னை இருக்க நான் மயிர் எடுக்காதது ஒரு விஷயமா?

ன்னை எதிர்த்து பல்வேறு மடாதிபதிகள் கொந்தளித்து இருப்பது, நித்தியானந்தாவை நிம்மதி இழக்க வைத்துள்ளது. 'மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுகிறார் என்ற உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, மயிலாடுதுறையில் கூடிய ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்தக் கூட்டம் நடந்தபோது பெங்களூருவில் இருந்தார் நித்தியானந்தா. தீர்மான விவரங்கள் கிடைத்ததும் மதுரைக்கு ஓடி வந்தார்!
நித்தியானந்தா விவரித்த கதை ஆச்சர்யமாக இருந்தது!
'என்னை மதுரை ஆதீனமாக நியமிக்கிறதுக்கு முன்னாடியே சந்நிதானத்துக்கிட்ட திரும்பப் திரும்பச் சொன்னேன். 'சந்நிதானம், என்னோட சிஷ்யன் நித்திய ஞான சொரூபானந்தாவை நியமிச்சுடுங்க. அவர் எந்த கான்ட்ராவர்சியும் இல்லாதவர். அவரும் சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். பெரிய பெரிய படிப்புகளைப் படிச்சுட்டு, துபாய்ல வேலை பார்த்தவர். மாசம் 25 லட்சம் சம்பளம் வாங்கியவர். அவரை ஆதீனமாக்கிடுங்க. என்னால் ஆன எல்லா உதவிகளையும் தொடர்ந்து செய்றேன்’னு சொன்னேன். அவர்தான் (இன்றைய மதுரை ஆதீனம்) கேட்கலை.
மற்ற ஆதீனங்கள் என்னை ஏத்துக்கிடலைன்னதும் சந்நிதானத்துக்கிட்டே, 'வாங்க நாம ரெண்டு பேரும் நேர்ல அங்கயே போவோம். விளக்கம் கொடுப்போம். ஏத்துக்கிட்டா பார்க்கலாம். இல்லைன்னா நான் ரிசைன் பண்ணிடுறேன்’னு சொன்னேன். சந்நிதானமும் அதை அவங்ககிட்ட சொன்னாங்க. ஆனா, அதுக்குள்ள என்னை அவதூறாப் பேசி, சட்டரீதியா ஆக்ஷன் எடுப்போம்னு மிரட்டுறாங்க. ஆக, பேச்சுவார்த்தையில் முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம், இப்ப யுத்தம் ஆகிடுச்சு.
நான் என் பதவி, சொத்துக்கள் எல்லாத்தையும் விட்டுட்டு நடுரோட்டுக்கு வர்றேன். 30 நாட்களில் என்னால் மறுபடியும் அதை எல்லாம் உருவாக்க முடியும். உங்களால் ( மற்ற மடாதிபதிகளைக் கேட்கிறார்!) முடியுமா? ஒரு மதத் தலைவருக்கு ஆன்ம பலம்தான்யா பலம். நான் இப்போ உறுதிமொழி எடுத்துக்கிறேன். சந்நிதானத்தின் காலத்திலோ, அதற்குப் பிறகோ, மதுரை ஆதீனத்தின் எந்தச் சொத்துக்களும் விற்கப்படாது. மேலும் மேலும் சொத்துக்களை வாங்கி ஆதீனத்தை விரிவுபடுத்துவேன்' என்றார் நித்தியானந்தா.
''அப்படீன்னா மதுரை ஆதீனத்தின் சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். 'என்னுடைய மடத்தின்சொத்துப் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டு விட்டேன். இன்டர்நெட்டில் அதைப் பார்க்கலாம். மதுரை ஆதீனத்தின் சொத்துப் பட்டியலை சந்நிதானத்தின் ஒப்புத​லோடு வெளியிடுவேன்' என்று வாக்குறுதி கொடுத்தவர்,
'நான் முடியை ஏன் எடுக்கலைன்னு கேட்கிறாங்க. இந்து மதத்துக்குத் தலை போற பிரச்னை எத்தனையோ இருக்கும்போது மயிர் ஒரு பிரச்னையாய்யா? என் முடியைப் பத்தி அவங்க பேசினா, அவங்க மீறுகிற 108 சம்பிரதாயங்களை நான் ஆதாரப்பூர்வமாக வெளியிட வேண்டியது இருக்கும்'' என்று மேலும் கொந்தளித்தார்.
'அப்படின்னா முடியை எடுக்க மாட்டீங்​களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்க, 'ஆதீனத்​திடம் என் தலைமுடியை எடுத்து விடவா என்று ஆரம்பத்திலேயே கேட்டேன். இந்த ஹேர்​ ஸ்டைலோடு உலகம் முழுக்கப் புகழ் பெற்றுவிட்டீர்கள். அது உங்களோட ஐடென்டிட்டி. அதை எடுக்க வேண்டாம்னு சொல்லிட்​டார். அதான் எடுக்கலை.
என்னை ஆதீனமாக நியமித்தது சரி​யில்லை என்றால், சந்நிதானத்திடம்தானே பேசி​​​யிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால், அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன். இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள். என்னால் அதைத் தடுக்க முடியாது.
அதேபோல, கூட்டுச் சதி 120(பி), மான நஷ்டம், அவதூறு ஏற்படுத்துதல் 100, 101, சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அனைத்து மடாதிபதிகள் மீதும் தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள். மடாதிபதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், என்னுடைய லட்சக்கணக்கான பக்தர்கள் ரத்தத்​தால் கையெழுத்திட்டு, கைநாட்டு வைத்துக் கடிதம் அனுப்ப உள்ளார்கள்.
ஜூனியர் விகடன்ல எழுதி​யிருக்​காங்க. அவருக்குப் பணம் இருக்கு... புகழ் இல்லாததால் ஆதீனமாகி​ட்டார்னு. எனக்கா புகழ் இல்லை? உலகத்தில் அதிகமாகப் பார்க்கப்படுகிற, பேசப்படுகிற விஷயம் என்னுடைய வீடியோக்​கள்தான்'' என்று விளக்கம் கொடுத்தார்.
இதுக்கு மேலும், இந்து அமைப்பு​கள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதுக்கு திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு' என்று எச்சரித்தார் நித்தியானந்தா.
என்ன சொல்லப்போகின்றன இந்து அமைப்புகள்?

No comments:

Post a Comment