Saturday 31 March 2012

நமது உணவுப் பழக்கம் எப்படி இருக்கவேண்டும்?

                                                   

நாம் உண்ணும் உணவு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.

பசிக்கு பின்னரே சாப்பிட வேண்டும்.

உணவிற்கு முன்னர் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.

விரதம், உடல் எடை குறைப்பதற்காக வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. இதேபோன்று அதிகமாக உண்பதும் தவறு.

சமைப்பதற்கு முன் அசைவம் உண்போர் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.

கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடை யால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.

சமையல் எண்ணைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது.

இரவு படுக்கைக்குப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள் உங்கள் இதயத்தின் ஆயுளை அதிகரிக்கும்

வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை அன்டி-ஆக்ஜிடென்ட் வைட்ட மினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்து வைப்பதில் பலன் இல்லை.
குக்கரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.

"·பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே நம் பாக்கெட்டுக்கும் (பணம்) நம் இதயத்துக்கும் நல்லதல்ல.

பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ சரியான நேரத்தில் உண்ண வேண்டும், உணவில் காய்கறி, பழங்கள் அதிகமாகவும், கொழுப்புச்சத்து, உப்பு ஆகியவை குறைவாகவும் இருக்க வேண்டும்.

உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment