தனுஷ§டன் இப்போது இருப்பது ஐஸ்வர்யா அல்ல... ஸ்ருதிஹாசன். அட, '3’ புரொமோஷனுக்காக ஹீரோவும் ஹீரோயினும் பரபரப்பாக இருக்கிறார்கள்.
''படம் ரொம்ப கிளாமரா இருக்குமோ?''
''இப்படி எப்படிப் பேச்சு கிளம்புச்சு? நிச்சயம் நல்ல படமா இருக்கும். ஒரு மனுஷனோட சந்தோஷம், துயரம் ரெண்டுமே உறவுகள்தான். அன்பு, காதலை விளையாட்டு மாதிரி டீல் பண்ணக் கூடாது. அதை உணரணும். அதுபத்திதான் இந்தப் படம் பேசும். ஜாலியா பண்ணிட்டுப் போற படம் இல்லை இது. நின்னு விளையாடி ஸ்கோர் செய்ய வேண்டிய ஏரியா. ஆரம்பத்தில் வெளியான சில ஸ்டில்களில் உங்களுக்கு கிளாமர் அதிகம் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, சென்சார்ல படத்துக்கு 'யு’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க. குடும் பத்துல உள்ள எல்லாரும் எந்தச் சங்கடமும் இல்லாம பார்க்கலாம். ஏன்னா, படத்தை டைரக்ட் பண்ணது ஒரு பொண்ணு. ஐஸ்வர்யா சொன்ன மாதிரியே எடுத்திருக்காங்க!''
''சினிமாவில் எல்லாமும் பேசு வாங்க. ஆனா, உண்மை அது இல்லை. நடிச்சது, படம் தயாரிச்சது மட்டும்தான் என் வேலை. மத்தபடி எல்லாம் ஐஸ்வர்யாவின் உழைப்பு!''
''மத்த நடிகர்கள் யார்கிட்டயும் ஒட்டாம தனியா இருக்கீங்க. ஸ்டார் கிரிக்கெட்லகூட விளையாடுறது இல்லை. ஏன் இந்தத் தனிமை?''
'' '3’ பட பப்ளிசிட்டிக்காக ஹைதரா பாத், சென்னைனு மாத்தி மாத்தி ட்ரிப் அடிச்சுட்டு இருந்தேன். அப்போ எல்லாம் வீட்ல என்கிட்ட பேசவே பயப்படுவாங்க. 'வள்’னு எரிஞ்சுவிழுவேன். 'மயக்கம் என்ன?’ ஷூட்டிங் சமயம் மூஞ்சியை உர்ருனு வெச்சுட்டே தூங்கிட்டு இருந்தேனாம். படம் முடிஞ்சாதான், அந்த கேரக்டர்ல இருந்து வெளி வர முடியுது. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். ஆனா, என்னமோ... சினிமாவைவிட்டு வெளியே வர முடியலை!''
''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'கொல வெறி’க்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்ப அதிகம்தானே?''
''ம்... நான் எந்த முயற்சியும் செய்யாம எனக்குக் கிடைச்ச வரம்னு சொல்லலாம். ரொம்ப ரொம்ப சந்தோ ஷமா இருக்கேன். டெண்டுல்கருக்காகப் பாடினேன். நேத்து டெண்டுல்கரே ஒரு பேட்டியில், 'தனுஷ் பாடியது அற்புதமாக இருந்தது. மனசின் ஆழத்துல அன்பு இல்லைன்னா இப்படிப் பாட முடியாது. அவருக்கு வாழ்த்துகள்’னு சொன்னார். என் ஜென்மத்துக்கு இது போதும். அவரோட ரசிகன் நான். அவரே என்னைப் பத்திப் பேசியது எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்க. எனக்குக் கிடைச்ச வரவேற்பு அதிகம்னா, அதுக்கான தகுதியை நான் வளர்த்துக்கிறேன்!''
''முன்னாடி மாதிரி இல்லை. இப்ப உங்ககிட்ட நிறைய பெர்சனல் கேள்விகளும் கேட்க வேண்டிய சூழல்... அதை உணர்றீங்களா?''
''என் பாட்டுக்கு நான் நடிச்சிட்டு இருக்கேன். பார்த்துப் பார்த்துப் படம் பண்றேன். அவசரப்படாம நடிக்கிறேன். வேறு எந்த விதத்திலும் பெர்சனல் விஷயங்களில் நான் அடிபடலை. என்ன இருக்கு பெர்சனலா என்கிட்டே?''
''ஸ்ருதிஹாசனுக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி நிறைய செய்திகள் அடிபடுதே?''
''இப்ப செய்திகள் எதுவும் வரலையே... இந்த நேரம் இந்தக் கேள்வியே தேவை இல்லைனு நினைக்கிறேன்!''
No comments:
Post a Comment