Monday, 16 April 2012

ரோஜா இதழ் போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா??

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதில் உதடுகளின் பங்கு மகத்தானது. பேசும் போதும் புன்னகை செய்யும்போதும் உதடுகளின் பங்களிப்பு அதிகம். பிறரை வசீகரிக்கும் உதடுகளைப் பெற அனைத்து பெண்களும் விரும்புவர். 

இத்தகைய ரோஜா இதழ்போன்ற உதடுகள் பெற என்ன செய்வது? உங்கள் உதடுகளில் அழகு கெட என்னக்காரணம்? அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.


To get smooth lips like rose petals
To get smooth lips like rose petals 

உடலில் கொழுப்புச் சத்து குறையும்போது, உதடுகள் தானாகவே சுருங்கி விடுகிறது. இதனால் தோற்றத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள்(Green Vegetables), பழங்கள்(Fruits), போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


உதடுகளின் சுருக்கத்தைப் போக்க Vasalin தடவலாம். வைட்டமின் 'E' நிறைந்த sunscreen Lotion தடவிக்கொள்ளலாம். 

To get smooth lips like rose petals
To get smooth lips like rose petals 

அதிக குளிர், மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்காமல் உதடுகள் கறுத்து, தடித்துவிடும். ஒரு சிலருக்கு வெப்பமிகுதியால் உதடுகள் வெடித்துவிடும். இதைப்போக்க பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு(Gooseberry juice) கலந்து, உதடுகளில் தடவி வர, தடிப்பு, வெடிப்பு, கறுமை அனைத்தும் நீங்கி, புதிய சிவந்த நிறம் உதடுகளுக்கு உண்டாகும். 

உதடுகள் மென்மையாக ஆரஞ்சுபழ சாறுடன் வெண்ணை கலந்து உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். 

மென்மையான மற்றொரு வழி வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு குளிர்ந்த நீர் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம். வாரத்திற்கு மூன்றுநாட்கள் தொடர்ந்து செய்துவர உங்கள் உதடுகள் ரோஜா இதழ்களைப் போன்ற நிறத்துடன் மென்மையாக மாறும். 

மற்றொரு எளிய வழிமுறையும் உள்ளது. ஒரு சிட்டிகை அரைத்த உளுத்தம் மாவுடன் ஒரு சொட்டு தேன்(Honey) கலந்து குழைத்துக்கொள்ளுங்கள். இந்த பசையை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். ஒரு சில நாட்களில் உங்கள் உதடுகள் மென்மையாக மாறுவதோடு, உதடுகள் ரோஜா இதழ்களின்(Rose petals) நிறத்தைப் பெறும்.

பாதாம் பவுடர்(Almond powder) சிறிதளவுடன் கொஞ்சம் பாலாடை(Cheese) கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும். 

எலும்மிச்சை சாறுடன் சிறிதளவு பாதாம் எண்ணெயும் கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்த்தால் உதடுகள் மென்மையாகும். தொடர்ந்து இதை ஒரு வாரத்திற்கு செய்யும்போது ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். 

உதடுகளை மென்மையாக்க பெட்ரோலியம் ஜெல்லியையும்(Petroleum jelly) சிலர் பயனபடுத்துகிறார்கள். இதுவும் உதடுகளை மென்மையாக வைத்திருக்க உதவும். 


மேற்கண்ட குறிப்புகளை செய்து பாருங்கள்! அழகான ரோஜா இதழ்களைப் போன்ற உதடுகளைப் பெற்றிடுங்கள்.

முக்கியக் குறிப்பு: இந்தக் குறிப்புகளைச் செய்துபார்க்கும்போது மென்மையாக உதடுகளை கையாள வேண்டும். ஒரே நாளில் உதடுகள் நிறம் மாறவில்லையே என அழுத்தித் துடைப்பதே, மிக அழுத்தமாக உதடுகளைக் கையாள்வதோ கூடாது. அதிக அழுத்தம் கொடுத்து உதடுகளைத் துடைத்தெடுப்பதால் வெப்பம்மிகுதியாகி உதடுகளில் கொப்புளங்கள் ஏற்படலாம். எனவே மருத்துவக் குறிப்புகளில் சொல்லியுள்ளதை கவனமாகப் படித்து அதன்படி செய்யவும்.

No comments:

Post a Comment