ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக் கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3’ படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி, வந்த வேகத்திலேயே திரும்பியும் விட்டது. அதனால், விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம். படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது 'கொலவெறி’யில் இருக்கிறார்கள்.
'ரஜினியிடம் சென்று முறை யிட்டால், 'பாபா’, 'குசேலன்’ மாதிரி நஷ்டஈடு கிடைக்கலாம்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரளத் தொடங்கினார்கள். இந்தத் தகவல் எப்படியோ ரஜினி காதுக்கும் போனது. உடனே விழித்துக்கொண்டவர், 'எனக்கும் '3’ படத்துக்கும் வியாபாரரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை’ என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.
முன்னதாக, படம் பணால் என்று ரிசல்ட் தெரிந்ததுமே தனுஷ், ஹாங்காங் செல்வ தாகச் சொல்லிவிட்டு பாங்காக் பறந்துவிட்டாராம். எங்கே இருக்கிறார் என்ற தகவலே சொல்லாமல் இதுவரை தலைமறைவாக இருந்தவர், 'கோச்சடையான்’ படப் பிடிப்புக்காக ரஜினி கேரளா சென்ற தகவல் கிடைத்த பிறகே சென்னைக்குத் திரும்பி இருக் கிறார். ஆனாலும் யாரையும் சந்திக்கக் கூடாது என்று தனுஷின் செல்போன் ஸ்விட்ச்-ஆஃப் நிலையில் தான் இருக்கிறதாம்.


''தனுஷ் நடித்த, 'மயக்கம் என்ன’ படத்தின் கர்நாடக உரிமையை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். அதில் 20 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. இப்போது '3’ படத்தைப் பற்றி ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து 2.5 கோடி ரூபாய்க்குத் தள்ளினார்கள். இப்போது இரண்டு கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறேன்'' என்று கன்னட விநியோகஸ்தரும் கதிகலங்கி நிற்கிறாராம்.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத் திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.
''கோவை ஏரியாவுக்கு '3’ படத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் விலை சொன்னார் கஸ்தூரிராஜா. நான்

நஷ்டத்தை ரஜினியிடம் திருப்பிக் கேட்டவர்கள், அவர் படத்தை திரையிட்டு லட்சம் லட்சமாய் லாபம் சம்பாதித்தார்களே. அப்போது பங்கு கொடுத்தார்களா? இப்போது, ரஜினியிடம் பணம் வாங்க வேண்டும் என்று பேசியவர் ஆந்திர விநியோகஸ்தர்தான். அவர் எப்போதும் இப்படித்தான் ஏடாகூடமாகப் பேசுவார். ரஜினிக்கும் '3’ படத்துக்கும் என்ன சம்பந்தம்? எதுக்குத் தேவை இல்லாம அவரை வம்புக்கு இழுக்கணும்? '3’ படத்தை வாங்கச் சொல்லி விநி யோகஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தாரா ரஜினி? அந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்று நீங்களாகத்தானே விரும்பிப் போய் வாங்கினீர்கள்? எல்லாத் தொழிலிலும் லாபம், நஷ்டம் இரண்டும் உண்டு. அதற்கு சினிமா மட்டும் விதிவிலக்கல்ல...'' என்று விளக்கம் கொடுத்தார்.
ரஜினிக்கு சிக்கலாக மாறி இருக்கிறது '3’. இதில் இருந்து அவர் எப்படி வெளியில் வருவாரோ தெரியவில்லை!
No comments:
Post a Comment