கான்சர்ட் நிறுவனம், ஏற்கெனவே சமையல் எண்ணெய், பால் மற்றும் வெட்கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து, அந்த முடிவுகளை நாணயம் விகடனில் வெளியிட்டது. இந்த வாரம் வங்கிச் சேவை பற்றிய சர்வேயை வெளியிடுகிறது. சர்வே முடிவுகளை பார்க்கும்முன் வங்கிகள் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்ப்போம்.
ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் ஒரு காலாண்டுக்கு 12 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படும்.
சிட்டி பேங்கில் கணக்கு துவங்க ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. மேலும் காலாண்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 3 லட்ச ரூபாய் இருக்க வேண்டி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மறைமுக கட்டணங்கள் மிக மிகக் குறைவு.
பழைய தனியார் வங்கிகளில் கடன்கள் வேகமாக பரிசீலனை செய்யப்பட்டாலும், வட்டி கொஞ்சம் அதிகமாகவே வசூலிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வங்கிகள் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் அதிக கவனம் செலுத்துகின்றன.
பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டில் பணம் கட்ட தவறினால் அதிக அபராதத்தை விதிக்கிறது.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள், பணம் படைத்த தனிநபர்களுக்கும் (ஹெச்.என்.ஐ.), வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இது தவிர, ஒவ்வொரு வங்கிகளும் சிறப்பு கிளை துவங்கி செயல்படுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு எஸ்.எம்.இ. கிளை, என்.ஆர்.ஐ. கிளை, ஃபாரெக்ஸ் கிளை, ஹைடெக் கிளை போன்ற சிறப்பு கிளைகளும் இருக்கிறது.
வங்கிகளின் சேவை எப்படி இருக்கிறது என தென் இந்தியா முழுவதும் 6,000 நபர்களிடம் கேள்விகளைக் கேட்டு, அவர்கள் சொன்ன முடிவுகளை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வங்கிக்கும் கிரேடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிரேடு அடிப்படை?
பொதுத்துறை வங்கிகள் குரூப் 'ஏ’ என்றும், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் குரூப் 'பி’ என்றும், பழைய தலைமுறை தனியார் வங்கிகள் குரூப் 'சி’ எனவும் வங்கிகளின் தன்மையைப் பொறுத்து மூன்று குரூப்களாகப் பிரித்து சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. வங்கிகளின் சேவை குறித்து மக்களிடம் எடுத்த சர்வே முடிவுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. \நன்றி-விகடன்
No comments:
Post a Comment