Tuesday, 17 April 2012

நொங்கு பற்றிய தகவல்


முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும்.

பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை.

மாம்பழம் போல சம்மரில் மட்டுமே கிடைக்கும் ஓர் அருமையான இயற்கையின் அன்பளிப்பு 'நுங்கு' அதில் பனைமரத்தின் உச்சி முதல் பூமிக்குள் புதைந்த உள்ளங்கால் வரை அனைத்தும் பல வகையில் பயன் படக் கூடியவை என்பதை தெரிவிக்கும்.

இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.

நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.

நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.

நன்கு முற்றி விட்ட பின் இதனை கடுக்காய் என்பர். கடுக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. கடுக்காய் சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.

நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும்.எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்.நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.பனை நொங்கு அம்மை நோயின் வேகத்தைக் குறைக்கும் .நுங்கை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை . இராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்த மரங்கள் அதிகமாகவே காண படுகிறது , இதை வைத்து ஒரு தொழிற்துறை ஓன்று ஆரப்பிதால் நிறைய வேலை வாய்ப்பும் உருவாகும் 

No comments:

Post a Comment