கோடையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால் அஜீரண கோளறு வராது !!!!
கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உடைய உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். இந்த சுவைகளால் பித்தம் சாந்தமடைகிறது. எனவே கோடையில் உண்ணவேண்டிய எளிதான ஆரோக்கிய உணவுகளை பட்டியலிட்டுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
கோடையில் மிதமாக உண்ணுங்கள் இதனால் ஜீரண உறுப்புகள் எளிதாக உணவுகளை ஜீரணித்து சத்துக்களாக மாற்றும். நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும். இதனால் பசி தூண்டும். அதேபோல் கீரை வகைகளை சாப்பிடலாம்.
பழவகைளில் இனிப்பானவை நல்லது. மலைப்பழம், பூவன்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை ஆகியவற்றின் பழரசங்களை பசிநிலைக்குத் தகுந்தவாறு குடித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவேண்டும்.
துவர்ப்புச் சுவைகொண்ட வாழைப்பூவை சாப்பிட்டால் பித்த சாந்தியும், ரத்த சுத்தியும் ஏற்படும் வாரத்திற்கு இருமுறையாவது கோடையில் வாழைப்பூவை உணவில் சேர்க்க வேண்டும். அதுபோல நீர் காய்களாகிய வெள்ளரிக்காய், புடலங்காய் பூசணிக்காய் போன்றவற்றை கூட்டு போல் (தேங்காய், மிளகு, ஜீரகம் பொடித்து சேர்த்த) செய்து சாப்பிடவேண்டும். தண்ணீரைக்கூட மண்பானையில் ஊற்றி குடிக்கலாம் உடல் சூடு குறையும்.
தினசரி உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி போன்றவைகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சி, கொத்தமல்லி, உள்ளிட்டவைகளை உணவு ஜீரணத்திற்காக சேர்த்துக்கொள்ளலாம். இதனால் கோடையில் சூட்டினால் ஏற்படும் வயிறு கோளாறுகள் தவிர்க்கப்படும்.
No comments:
Post a Comment