குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள் வரை தாய்ப்பாலே போதுமான உணவாகும். பாலுட்டும் தாய்மார்கள் சரிவர உணவு உட்கொள்ளாவிட்டால் குழந்தைக்கு தாய்ப்பாலின் அளவு குறையும்.
முதல் மூன்று மாதங்கள் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பிறகு தாய்பால் கொடுக்கும் இடைவெளி நேரங்களில் காய்கறிகள் வேக வைத்த சூப்பில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து ஒன்று அல்லது இரண்டுஸ்பூன் அளவு கொடுக்கலாம்.
பழச்சாறில் வெந்நீர் கலந்து 3 டீஸ்பூன் கொடுக்கலாம். ஒரு துளி மீன் எண்ணெய் கூட கொடுக்கலாம். நான்காவது மாதத்தில் தாய்ப் பாலுடன் குழந்தைக்கு ஏதேனும் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தையின் சீரண மண்டலம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் படியாக கூழ் போன்ற உணவுகளைக் கொடுக்கலாம்.
உங்கள் வீட்டிலேயே தயாரித்த உணவுகளைக் கொடுப்பது குழந்தைக்கு மிகுந்த நலனை உண்டாக்கும். இதனை HCCM - High Calorie Careal Milk என்கின்றனர். HCCM அதிக ஊட்டச்சத்து நிறைந்த திடப்பொருளை திரவப் பொருளாக மாற்றிக் கொடுக்கும் உணவு என்பதே இதன் பொருளாகும்..
தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு(புழுங்கல்) - அரை கிலோ
கேழ்வரகு அரை கிலோ
இவற்றை எடுத்து தனித்தனியாக நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி வெயிலில் காயவைத்து பின் அதனை தனித்தனியாக மாவாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கேழ்வரகு மாவு - 2 டீஸ்பூன்
எடுத்து 1 குவளை நீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் சர்க்கரை அரை ஸ்பூன் நெய் கலந்து கொடுத்து வரவேண்டும். இந்த HCCMஇல் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், சர்க்கரை கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் சத்துக்கள் உள்ளன. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர் உணவாக செயல்படுகிறது.
தாய்ப்பாலும் இந்த HCCM உணவும் மாறி மாறி தினமும் 3 மணிக்கு ஒரு தரம் வீதம் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு வளர்ச்சியடையும்.
டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளைவிட இது சிறந்த உணவாக இருக்கும்.
குழந்தைக்கு 6 முதல் 9 மாதம் வரை, திட உணவாக அரிசி சாதத்தை குழைத்து கீரையைக் கடைந்து சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம்.
கேழ்வரகு, கோதுமை, சோயா, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை அரைத்து சத்து மாவு கஞ்சியாக கொடுக்கலாம். தாய்பாலுடன் இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து கொடுத்தால் குழந்தைக்குத் தேவையான போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment